கொரோனா பீதியால் தவிக்கும் 18 சொகுசு கப்பல்கள்! எல்லைகள் அனைத்தும் மூடப்பட்டதால் அச்சம்!
கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் அபரவு இதுவரை 28 ஆயிரத்திற்கும் அதிகமானவர்களை பலிகொண்டுள்ளது. இதனால் உலக நாடுகள் தங்களது போக்குவரத்து, தொழில்துறை என அனைத்தையும் முடங்கியுள்ளது.
பெரும்பாலான நாடுகள் தங்களது நாட்டின் எல்லைகளை மூடிவிட்டன. வெளிநாட்டு பயணிகளை எந்த வழியிலும் உள்நுழைய அனுமதிப்பதில்லை. விமான போக்குவரத்து, நீர்வழிபோக்குவரத்து என அனைத்தும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
அதனால், உலகம் முழுக்க 18 சொகுசு கப்பல்கள் கரை ஒதுங்க எந்த நாடும் அனுமதிக்காததால் அவை நடுக்கடலில் தத்தளிக்கின்றன. குறிப்பாக அமெரிக்காவை சேர்ந்த ஒரு சொகுசு கப்பல் சிலி நாட்டின் எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டு அந்த கப்பல் கரை ஒதுங்க அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், 4 முதியவர்கள் அந்த கப்பலில் இறந்துவிட்டனர். 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 138 பேருக்கு சுவாசத்தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் இது பலருக்கும் நோய் பரவ ஆபத்து என அங்குள்ள மருத்துவர்கள் கூறி வருகின்றனர்.
இதே போல அமேரிக்கா, கனடா, பிரிட்டன் ஆகிய நாடுகளை சேர்ந்த 18 சொகுசு கப்பல்கள் நடுக்கடலில் பயணிகளுடன் தவித்து வருகின்றனர்.