ஈராக்கில் 18 ராக்கெட் மூலம் தாக்குதல்.. 4 வீரர்கள் உயிரிழப்பு…
ஈராக்கில் உள்ள பாக்தாத்தில் தாஜி விமான தளத்தின் மீது நேற்று சுமார் 18 ராக்கெட்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் 2 பேரும் , இங்கிலாந்து வீரர் ஒருவர் என மூன்று பேர் இறந்துள்ளனர். மேலும் 12 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த ராக்கெட்டுக்கள் டிரக்கின் பின்புறத்தில் இருந்து ஏவப்பட்டதாக ஈராக் ராணுவம் கூறியுள்ளது.இந்த தாக்குதல் சம்பவத்திற்கு அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் மைக் பாம்பியோ , இங்கிலாந்து வெளியுறவு துறை அமைச்சர் டோமினிக் ராப் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.