18 MLA_க்களுக்கும் ஆல்வா கொடுத்த TTV….அமைச்சர் ஜெயக்குமார் நக்கல்…!!

Default Image
தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேருக்கும் தினகரன் திருநெல்வேலி அல்வாவைக் கொடுத்துவிட்டார் என, அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, சென்னை நந்தனத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதன்பிறகு அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
இடைத்தேர்தலுக்காக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்களே?
இடைத்தேர்தல் குறித்து முடிவு செய்ய வேண்டியது அதிமுக அல்ல, இந்திய தேர்தல் ஆணையம். எப்போது தேர்தல் வந்தாலும் அதிமுகவுக்கு கவலையில்லை. பொறுப்பாளர்களை நியமிப்பது வழக்கம், அதனால் நியமித்திருக்கிறோம்.
கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்களை அழைத்ததற்காக டிடிவி தினகரன் அதிமுகவை விமர்சித்திருக்கிறாரே?
டிடிவி தினகரன் ஒரு மண்குதிரை. டிடிவி தினகரனை நம்பி ஆற்றில் இறங்கிய தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேரின் நிலைமை பரிதாபத்துக்குரியது. அவர்களின் நிலையை எண்ணி உண்மையிலேயே நாங்கள் வருத்தப்படுகிறோம். இவர்களுக்கு டிடிவி தினகரன் திருநெல்வேலி அல்வாவைக் கொடுத்துவிட்டார். தமிழக அரசியலில் எடுபடாத நபராகத் தான் டிடிவி தினகரன் இருக்கிறார். அவரைப் பற்றி நாங்கள் எந்த விதத்திலும் கவலைப்படுவதாக இல்லை.
dinasuvadu.com 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்