உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக தீவிரமாக பரவி வருவதால், இதனை கட்டுப்படுத்த அனைத்து நாட்டு அரசும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்த, பல வதந்தியான செய்திகளும் சமூக வலைத்தளங்களில் உலா வந்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில் கடந்த வாரம் கோவிட்-19 தொடர்பாக 18 மில்லியன் malware and phishing மின்னஞ்சல்களை பார்த்ததாக கூகுள் தெரிவித்துள்ளது. தினமும் 240 மில்லியன் ஸ்பாம் மின்னஞ்சல் உருவாவதாக கூகுள் தெரிவித்துள்ளது. இதில் 99.9 சதவீத போலி மின்னஞ்சல்களை தொடர்ந்து முடக்கி வருவதாகக் கூகுள் கூறியுள்ளது.
இந்த மின்னஞ்சல்களில் ஒன்று கொரோனா பற்றிய பீதியும் அல்லது கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டும் என்ற கோரிக்கை வைத்து பயனர்களைப் பதில் அளிக்க வைக்கின்றனர்.
அப்படி இலையென்றால் உலக சுகாதார அமைப்பு போல சில மின்னஞ்சல்கள் அனுப்புகின்றனர். இதை வைத்து பண மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.பயனர்கள் தங்களுக்குத் தெரியாத முகவரியிலிருந்து வரும் மின்னஞ்சல்களில் இருக்கும் file-லை பதிவிறக்கம் செய்ய வேண்டாம்.
மேலும் தெரியாத முகவரியிலிருந்து வரும் லிங்க்கை க்ளிக் செய்து பார்க்கும் முன் அது உண்மையான லிங்க் தானா என்று பயனர்கள் பார்க்க வேண்டும் என கூகுள் கூறியுள்ளது.
Malware எனப்படுவது ஒரு வகை கணினி வைரஸ் . இது கணினியில் உள்ள தகவல்களை மற்றவர்களுக்கு அனுப்பிக் கொண்டிருக்கும்.
phishing எனப்படுவது மின்னஞ்சல் மூலமாக ஏமாற்றி தகவல்களை பெற்று அதை முறைகேடாக அல்லது சட்ட விரோதமாக பயன்படுத்துவது.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…