ஆப்கானிஸ்தான் ராணுவ தாக்குதலில் தலிபான் தளபதி உட்பட 18 பேர் கொலை!
ஆப்கானிஸ்தானில் உள்ள அக்சா மாவட்டத்தில் அந்நாட்டின் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் தலிபான் தீவிரவாதிகளின் தளபதி உட்பட 18 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் அமைப்பினருக்கும் ராணுவத்தினருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருவது வழக்கம். இருப்பினும் கடந்த ஒரு வார காலமாக அங்கு தீவிரவாதிகளுக்கும் ராணுவத்தினருக்கு மோதல் வலுத்துள்ளது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் வடக்கு ஜவ்ஜ்ஜான் மாகாணத்தின் அக்சா மாவட்டத்தில் தலிபான் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக அந்நாட்டின் ராணுவத்தினருக்கு ரகசியமாக தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து தீவிரவாதிகளை தேடும் வேட்டையில் ராணுவத்தினர் இறங்கியுள்ளனர். அப்பொழுது ஒரு இடத்தில் பதுங்கி இருந்த தலிபான் அமைப்பினர் மீது ஆப்கானிஸ்தான் ராணுவத்தினர் விமானத் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் தலிபான் அமைப்பின் தளபதி காரி முபீன் என்பவர் உட்பட 18 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.