18 எம்.எல்.ஏ.க்கள் தீர்ப்பு நல்லபடியாக வரும்…வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் உற்சாகம்….!!
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு தீர்ப்பு கண்டிப்பாக நல்ல படியாக வரும் TTV தரப்பு வழக்கறிஞ்சர் உற்சாகமாக பதிலளித்துள்ளார்…
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு கடந்த ஜூன் 14 ஆம் தேதி நடத்தைப்பெற்ற போது வழக்கில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி சுந்தர் ஆகியோர் வேறுபட்ட தீர்ப்புகளை வழங்கினர்.மேலும் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி இதற்கான தீர்ப்பை அறிவிக்க மூன்றாவது நீதிபதியாக சத்தியநாராயணன் அவர்களை நியமித்தார்.இந்நிலையில் பலகட்ட விசாரணைகளை கடந்து இன்று அந்த 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு தீர்ப்பு வழங்கப்பட்ட உள்ளது.இந்த தீர்ப்பை வழக்கும் நீதிபதி சத்தியநாராயணன் தற்போது நீதிபதி அறைக்கு வந்துள்ளார்.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அனைத்து வழக்கறிஞ்சர்களும் , சிறப்பு பார்வையாளர்களும் மற்றும் சட்ட நிபுணர்களும் வந்துள்ளனர்.இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வந்த TTV தரப்பு வழக்கறிஞ்சர் செய்தியாளரிடம் பேசுகையில் , நல்லபடியாக வாதாடியுள்ளோம் , கண்டிப்பாக 18 எம்.எல்.ஏ.களுக்கு சாதகமாகத்தான் இந்த தீர்ப்பு வரும் என்று உற்சாகமாக பதிலளித்துள்ளார்.
DINASUVADU