18 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய அதே எண்ணில் லாட்டரி டிக்கெட் – ரூ.14 கோடி பரிசு அடித்த அதிசயம்..!
அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் 18 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய லாட்டரி டிக்கெட்டில் 300 டாலர் பரிசாக கிடைத்தது. அதன் பின் தற்போது அவர் ஒரு லாட்டரி டிக்கெட் வாங்கினார். அந்த லாட்டரி டிக்கெட் எண்ணை சரிபார்த்த போது அவருக்கு பரிசு விழுந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், அந்த எண் 18 ஆண்டுகளுக்கு முன் பரிசு விழுந்த அதே எண் என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அவருக்கு 4 கோடி ரூபாய் ஜாக்பாட் அடித்தது. அந்த பரிசுத்தொகையில் பாதியை தனது வீட்டிற்கும், மீதி பணத்தை சேமித்து வைக்க போவதாகவும் தெரிவித்தார்.
அதிர்ஷ்டம் ஒரு மனிதரின் வாழ்வில் எப்போது வரும் என்பது யாருக்கும் தெரியாது. அப்படிப்பட்ட அதிர்ஷ்டம் இவருக்கு 18 ஆண்டுகளுக்கு பின் அதே எண்ணில் வந்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.