176 கி.மீ. வேகத்தில் காற்று , புரட்டி போட்ட லெஸ்லி புயல்: 3,00,000 வீடுகளில் மின்சாரம் துண்டிப்பு..!!

Default Image

போர்ச்சுக்கல்லில் வீசிய லெஸ்லி சூறாவளி காற்றில் நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால் சுமார் 3 லட்சம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.ஐரோப்பிய நாடான போர்ச்சுக்கல்லை ‘லெஸ்லி’ என பெயரிடப்பட்டுள்ள சூறாவளிபுயல் தாக்கியது. இதில் மத்திய மற்றும் வடக்கு போர்ச்சுக்கல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
‘லெஸ்லி’ புயல் தாக்கிய பின் மணிக்கு 176 கி.மீ. வேகத்தில் காற்று வீசுகிறது. போர்ச்சுக்கல் தலைநகர் லிஸ்பின் மற்றும் லைரியா நகரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பலத்த மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் சூறைக்காற்றால் இதுவரை 27 பேர் காயம் அடைந்துள்ளனர்.
சூறாவளி காற்றில் நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தலைநகர் லிஸ்பன் மற்றும் லைரியா நகரின் புறநகர் பகுதிகளில் 3 லட்சம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.இதனால் அப்பகுதி முழுவதும் இருளில் மூழ்கி கிடந்தது. தகவல் தொடர்பு துண்டானது. குடிநீர் கிடைக்கவில்லை. இதனால் மக்கள் பெரும் துன்பத்துக்குள்ளாகி தவிக்கின்றனர்.
சூறாவளியின் கோர தாண்டவத்தால் லிஸ்டன், லைரியா உள்ளிட்ட பல நகரங்கள் துடைத்தெறியப்பட்டன.அவை போர்க்களம் போன்று காட்சியளிக்கின்றன. இந்த சூறாவளியால் யாரேனும் இறந்திருக்கிறார்களா? என்ற செய்தி வெளியாகவில்லை. ஆனால் யாரும் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்