17,000 கீ.மீ சைக்கிளில் சொந்த ஊரை அடைந்த இளைஞர்!
இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில் தற்பொழுது பஸ், ஆட்டோ மற்றும் இரு சக்கர வாகனங்களில் கூட செல்ல யாருக்கும் அனுமதி கொடுக்கப் படுவதில்லை. அனைத்து அனுமதிகளும் மறுக்கப்பட்ட நிலையில் தற்போது ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மகேஷ் ஜீனா எனும் 20 வயது இளைஞர் மராட்டிய மாநிலத்தில் சங்கிலி மிராஜ் என்ற தொழிற்பேட்டையில் வேலை செய்து வருகிறார்.
15 ஆயிரம் சம்பளம் வாங்கும் இவர், கடந்த மார்ச் 24-ம் தேதி ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டதால் வேலை செய்த தொழிலகம் மூடப்பட்டு உள்ளது. இதனால் அச்சத்தில் இருந்த இவர் கையில் இருந்து 6 ஆயிரம் ரூபாயுடன் பழைய சைக்கிள் வைத்து இருந்ததால் அதுலேயே ஊருக்குச் செல்வோம் என தீர்மானித்து விட்டார். கடந்த ஒன்றாம் தேதி பயணத்தை தொடங்கியவர் மராட்டியம் ஆந்திரா, சட்டீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களை கடந்து நான்காவதாக அவரது சொந்த மாநிலமான ஒடிசாவுக்கு வந்துள்ளார்.
அவருக்கு வழியும் தெரியாது வரைபடமும் கிடையாது. ஆனால் ரயில் நிலையங்களில் பெயரை மனதில் வைத்து அதை நினைவுபடுத்திக் கொண்டு இடையிடையே வந்த மனிதர்களிடம் கேட்டு விசாரித்து வந்துள்ளார். 7ஆம் தேதி இவர் ஒரு வழியாக ஒடிசாவை அடைந்துள்ளார். சுமார் 1700 கிலோ மீட்டர் தூரம் கடந்து வந்த மகேஷ் ஜீனாவை அவரது கிராம மக்கள் வழிமறித்து தனிமை படுத்தி உள்ளனர்.
ஏழுநாள் சைக்கிள் பயணம் குறித்து கூறும் பொழுது, எப்படியாவது தப்பித்து ஊர் போய் சேர்ந்துவிடலாம் என்று உறுதியாக இருந்தேன். ஒருவழியாக வந்துவிட்டேன். ஆனால் அடைபட்டு கிடைப்பதைவிட சைக்கிள் பயணம் மேல் என தோன்றுகிறது என தெரிவித்துள்ளார்.தற்போது இவரை அவரது சொந்த ஊர் மக்கள் பராமரித்து வருகின்றனர்.