இத்தாலியில் கொரோனாவுக்கு 17000 பேர் உயிரிழப்பு
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் சீனாவில் இருந்து பரவ தொடங்கிய இந்த கொரோனா வைரஸ் பல நாடுகளில் தினமும் பலரின் உயிரை பறித்து வருகிறது.
கொரோனா வைரசால் சீனாவிற்கு பிறகு இத்தாலி, தென்கொரியா, ஈரான் உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க உலகம் நாடுகள் பல கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றது.இந்நிலையில் உலக அளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்வர்களின் எண்ணிக்கை 14,30,516 ஆக உயர்ந்துள்ளது. பலியானவர்களின் எண்ணிக்கை 82,005 ஆக உயர்ந்துள்ளது.இந்நிலையில் இத்தாலியில் கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17,127 ஆக அதிகரித்துள்ளது.மேலும் இத்தாலியில் கொரோனாவல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,35,586 ஆக உள்ளது.