ஐஸ்லாந்து நாட்டில் ஒரு வாரத்தில் 17,000 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்பட்டதை தொடர்ந்து எரிமலை வெடிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஐஸ்லாந்து நாட்டின் தென்மேற்குப் பிராந்தியங்களில் ஒரு சிறிய எரிமலை வெடிப்பு ஏற்பட சாத்தியங்கள் உள்ளதாக அதிகாரிகள் கடந்த புதன்கிழமை தெரிவித்துள்ளனர்.ஏனெனில் கடந்த 8 நாட்களில் ஐஸ்லாந்தின் தென்மேற்கு பிராந்தியமான ரெய்க்ஜேன்ஸில் சுமார் 17,000 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் ,எனவே கடந்த 8 நாட்களில் 24 மணி நேரமும் பூமி அசைவதை உணர முடிந்ததாகவும் தலைநகர் ரெய்காவிக் குடியிருப்பாளர் தெரிவித்துள்ளார்.
எனவே ஐஸ்லாந்தின் வானிலை ஆய்வு மையம்,கெய்லிர் மலைக்கு அருகில் எரிமலை வெடிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக புதன்கிழமை அன்று தெரிவித்துள்ளது.அதனை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த மலையை சுற்றியுள்ள சாலைகள் முழுவதும் மூடப்பட்டுள்ளது.பொதுவாக ஆண்டுக்கு 1,000 முறை மட்டுமே ஐஸ்லாந்து நாடு நிலநடுக்கத்தால் பாதிக்க்கப்படும்.ஆனால் கடந்த 8 நாட்களில் 17,000 முறை நிலநடுக்கம் பதிவாகியுள்ளது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…