ஒபாமா,மஸ்க் உள்ளிட்ட பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகளை ஹேக் செய்ய மூளையாக செயல்பட்ட 17 வயது சிறுவன்

Default Image

முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா,மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர்  பில் கேட்ஸ் மற்றும் டெஸ்லா தலைமை நிர்வாகி எலோன் மஸ்க் உள்ளிட்ட பிரபலங்களின் ட்விட்டர்  கணக்குகளை ஹேக்கிங் செய்தது தொடர்பாக மூவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

ஹேக்கர்களால் குறிவைக்கப்பட்ட 130  ட்விட்டர் கணக்குகளில் 45 கணக்குகள்  எலோன் மஸ்க், அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, தற்போதைய அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் மற்றும் பில் கேட்ஸ் ஆகியோரின் கணக்குகளில் இருந்து குறிப்பிட்ட பிட்காயின்  முகவரிக்கு உடனடியாகப் பணம் அனுப்பினால் அது இரட்டிப்பாகி உங்களுக்கு திரும்பிவரும் எனப் பதிவிடப்பட்டது. 45 ட்விட்டர் கணக்குகளில், பாஸ்வேர்ட் ரீசெட் செய்யப்பட்டு, லாக் இன் செய்து ட்வீட்கள் பதிவு செய்யப்பட்டன எனவும் தெரிவிக்கப்பட்டது. அதாவது,1,000 டாலர்களை நீங்கள் எனக்கு அனுப்பினால் அது 2,000 டாலர்களாக இரு மடங்காக உங்களுக்கு திருப்பி அனுப்பப்படும் என்று பதிவிடப்பட்டது.

பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டு உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.பின்னர்தான் மர்மநபர்கள் ட்விட்டர் கணக்குகளை ஹேக் செய்தது தெரியவந்தது.கடுமையான போராட்டங்களுக்கு பின்னர் தான் பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகள் மீண்டு வந்தது.இதனிடையே தான் அமெரிக்காவோ இந்த ஹேக்கிங் செய்ததற்கு முக்கிய காரணம் சீனா மற்றும் ரஷ்யா என்று சந்தேகித்தது. இது குறித்து விசாரணையும் நடைபெற்று வந்தது.விசாரணையில் ஹேக் செய்தது இளம் வயதினர் என்று தெரியவந்தது.3 பேர் ஹேக் செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. அதில்,நிமா  பாசில்  என்ற 22 வயது இளைஞர் புளோரிடாவை சேர்ந்தவர். சேப்பேர்ட் என்ற 19 வயது இளைஞர் இங்கிலாந்தை சேர்ந்தவர்.கிராகாம் கிளார் என்ற   17 வயது சிறுவன்  புளோரிடாவை சேர்ந்தவன்.இந்த சிறுவன் தான் இதற்கு மூளையாக செயல்பட்டதாக கூறப்படுகிறது.இதனால் மூவரையும் கைது செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த ஹேக் மூலமாக  குறைந்தது 1 லட்சம் டாலர்கள் அளவில் முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்