இந்திய ரூபாயின் மதிப்பு டாலருக்கு ரூ .16 காசுகள் சரிவு
மும்பை: இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 16 காசுகள் சரிந்து ரூ.65.88 காசுகளாக உள்ளது. வங்கிகள் மற்றும் இறக்குமதியாளர்களிடையே அமெரிக்க டாலரின் தேவை உயர்ந்துள்ளது, உலகளவில் மற்ற நாணயங்களுக்கு எதிரான டாலரின் வலிமை மற்றும் உள்நாட்டு பங்குச்சந்தையில் காணப்படும் சரிவு போன்ற காரணங்களால் இந்திய ரூபாயின் மதிப்பில் சரிவு காணப்படுவதாக அந்நிய செலாவணி விநியோகஸ்தர் தெரிவித்துள்ளார். கடந்த வர்த்தகத்தில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 27 காசுகள் சரிந்து ரூ.65.72 காசுகளாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
2014 ஆம் ஆண்டு மோடி தலைமையில் மத்திய அரசு ஆட்சிக்கு வந்தபோது நாங்கள் ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 40க்கு வரும் என்று சாமியார் ரவி சங்கர் உட்பட பலரும் கூறினர்…!