விண்வெளியில் 6 ஆண்டுகள் சேமித்த விந்தணு மூலம் பிறந்த 168 எலிக்குட்டிகள்..!

Default Image

6 ஆண்டுகளாக சர்வதேச விண்வெளி மையத்தில் சேமித்து வைக்கப்பட்ட விந்தணு மூலமாக 168 எலிக்குட்டிகள் பிறந்துள்ளன.

ஜப்பான் நாட்டு ஆராய்ச்சியாளர் டெருஹிகோ வாகயாமா மற்றும் இவரது குழுவும் விண்வெளியில் கதிர்வீச்சால் உயிரணுக்களில் மரபணு மாற்றம் ஏற்படுமா என்பதை பரிசோதிக்க முயற்சி எடுத்துள்ளனர். கடந்த 2013 ஆம் ஆண்டு 3 பெட்டிகளில் 48 குப்பிகளில் எலிகளின் விந்தணுக்களை சர்வதேச விண்வெளி மையத்திற்கு அனுப்பியுள்ளது.

இந்த விந்தணுக்கள் உறைந்த மற்றும் உலர்ந்த நிலையில் அனுப்பியுள்ளனர். விண்வெளியிலிருந்து வரும் இந்த உயிரணுக்கள் மூலமாக உருவாகும் புதிய உயிர்களில் பாதிப்புகள் ஏதேனும் ஏற்படுகிறதா இல்லை சாதாரணமாக இருக்கிறதா என்பதை கண்டுபிடிக்க இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த விந்தணுக்கள் ஒவ்வொரு தொகுதிகளாக பூமிக்கு கொண்டுவரப்பட்டன.

முதலில் 9 மாதங்களுக்கு பிறகும், இரண்டு வருடங்களுக்கு பிறகும், இறுதியாக 6 வருடங்களுக்கு பிறகும் எடுத்துவரப்பட்டன. இந்த விந்தணுக்களை நீரிழப்பு செய்யப்பட்டதன் மூலம் தற்போது 168 எலிக்குட்டிகள் பிறந்துள்ளன. மேலும், இவைகள் விண்வெளியில் உள்ள கதிர்வீச்சிகளால் பாதிப்பு அடையவில்லை. பூமியில் இருக்கும் சாதாரண எலிகள் போன்றே இவைகளும் இருப்பதாக கூறியுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்