பின்லாந்து பிரதமரான சன்னா மரின் தங்கள் நாட்டில் பேறுகால விடுப்பு கொள்ளகையில் மாற்றம் கொண்டு வரப்போவதாக அறிவித்தார். அதில் குழந்தை பிறப்புக்கு பின், தாயை போலவே தந்தைக்கும் 164 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்கப்படும் என அறிவித்துள்ளார்.
கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பின்லாந்து பிரதமராக 34 வயதான பெண் சன்னா மரின் என்பவர் பதவியேற்றார். சில வாரங்களுக்கு முன்பு உலக பொருளாதார கூட்டமைப்பில் பேசிய சன்னா மரின், பாலின சமத்துவத்தை நிலைநாட்டும் வகையில் தங்கள் நாட்டில் பேறுகால விடுப்பு கொள்ளகையில் மாற்றம் கொண்டு வரப்போவதாக அறிவித்தார். அதில் குழந்தை பிறப்புக்கு பின், தாயை போலவே தந்தைக்கும் 164 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படும் என பின்லாந்து அரசு அறிவித்துள்ளது. பின்னர் இந்த 164 நாட்கள் விடுமுறையில் தாயோ அல்லது தந்தையோ 69 நாட்கள் விடுப்பை ஒருவருக்கொருவர் பகிர்ந்துக் கொள்ளலாம்.
மேலும் இந்த திட்டத்தில் தந்தை, தாய் இருவரில் ஒருவர் மட்டும் இருக்கும்பட்சத்தில் அவருக்கு 328 நாட்கள் பேறுகால விடுமுறை வழங்கப்படும் என தெரிவித்தது. இந்நிலையில், குழந்தை வளர்ப்பு இருவருக்குமே சமமான பொறுப்பு இருப்பதை உணர்த்தும் வகையில் இதுபோன்று திட்டத்தில் ஆண்களுக்கான விடுமுறை நாட்களை அதிகரித்துள்ளதாக பின்லாந்து அரசு தெரிவித்துள்ளது. இதுபோன்று பின்லாந்து பிரதமராக சன்னா மரின் பொறுப்பேற்றவுடன், வாரத்திற்கு 4 நாட்கள் மட்டும் வேலை பார்த்தால் போதும் என்ற ஒரு புதிய திட்டத்தை அறிவித்தார். வேலை நாட்களைக் குறைப்பதன் மூலம், மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் அதிக நேரத்தைச் செலவிட முடியும் என தெரிவித்திருந்தார் என குறிப்பிடத்தக்கது.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…