நியூ ஹாம்ப்ஷயர் உணவகத்தில் 38 டாலர் உணவுக்கு 16,000 டாலர் டிப்ஸ்..!

Default Image

நியூ ஹாம்ப்ஷயர் உணவகத்தில் 38 டாலருக்கு உணவு வாங்கிய நபர் 16,000 டாலர் டிப்ஸ் கொடுத்துள்ள சம்பவம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

உணவகங்களில் டிப்ஸ் கொடுப்பதில் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது. அந்த வரிசையில் தற்போது இந்த செய்தியும் இடம்பெற்றுள்ளது. நியூ ஹாம்ப்ஷயர், லண்டன்டெர்ரி என்ற இடத்தில் ஸ்டம்புல் இன் பார் மற்றும் கிரில் என்ற உணவகத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த உணவகத்தின் உரிமையாளர் மைக் சாரெல்லா அவரது முகநூலில் 38 டாலர் உணவு வாங்கிய நபர் 16,000 டாலர் கொடுத்திருக்கும் பில்லை பகிர்ந்து அவருக்கு நன்றியை தெரிவித்துள்ளார்.

இது குறித்து சாரெல்லா தெரிவித்திருப்பதாவது, ஒருவர் கடைக்கு வந்து பீர் மற்றும் சில சிப்ஸ் வகைகளை ஆர்டர் செய்தார். பின்னர், 3.30 மணியளவில் அவர் அங்கு வேலை செய்யும் ஊழியரிடம் பில் கேட்டுள்ளார். இதற்கு, சாரெல்லாவும் பில்லை கொண்டு அவரிடம் குடுத்துள்ளார். அப்போது அந்த “நபர் இது அனைத்தையும் ஒரே இடத்தில் செலவிட வேண்டாம்” என்று அவளிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். வேலை அதிகம் இருந்ததன் காரணத்தால் ஊழியர் அவர் கொடுத்த பணத்தை கவனிக்கவில்லை.

ஆனால் கடை உரிமையாளர் அவர் கூறிய விஷயத்தை வைத்து அவர் எவ்வளவு பணம் கொடுத்துள்ளார் என்பதை பார்த்துள்ளார். அதில் 16,037 டாலர் இருந்ததை பார்த்து அதிர்ந்து போய் அவரிடம் கேட்டுள்ளார். அட கடவுளே நீ என்ன விளையாடுகிறாயா? உனக்கு என்னாயிற்று என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த நபர், இதை நீங்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன் என கூறிவிட்டு சென்று விட்டார்.

பின்னர் சனிக்கிழமையன்று வந்துள்ளார். அப்போது ஒரு சில நிமிடங்கள் அவரோடு கடை உரிமையாளர் பேசியிருக்கிறார். இந்த பணத்தை வைத்திருப்பது சங்கடமாக இருக்கிறது என்பதை தெரிவித்துள்ளார். அதற்கு பதிலளித்த அந்த நபர், இல்லை இது நடக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் அதனால் வைத்துக்கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு சென்றுள்ளார். 38 டாலருக்கு 16,000 டாலர் டிப்ஸ் கொடுத்த காரணத்தால் இந்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்திய ரூபாய் அடிப்படையில் 16,000 டாலர் என்பது 11,87,600 ரூபாய் ஆகும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்