வார இறுதிக்குள் 160 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி – அமெரிக்கா இலக்கு!
இந்த வார இறுதிக்குள் 160 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி போட்டு முடிக்கப்படும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவர்கள் கூறியுள்ளார்.
உலகம் முழுவதிலும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக பரவி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் இன்னும் குறைந்தபாடில்லை. இந்நிலையில், கொரோனாவிலிருந்து மீள்வதற்கு தடுப்பூசி போடுவது ஒன்று தான் தீர்வு என மக்கள் நம்புகின்றனர். எனவே, மக்கள் பலரும் தடுப்பூசி போடுவதில் ஆர்வம் கட்டி வருகின்றனர்.
குறிப்பாக அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் மிக மும்முரமாக நடைபெற்று வருகிறது. நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட்டு விட வேண்டும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவர்கள் ஆர்வம் கட்டி வருகிறார். இந்நிலையில், இது குறித்து பேசியுள்ள அதிபர் ஜோ பைடன், இந்த வார இறுதிக்குள் அமெரிக்காவில் உள்ள 16 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி போடும் இலக்கு எட்டப்பட்டு விடும் என கூறியுள்ளார்.
மேலும், பலர் தடுப்பூசி போடாமல் இருப்பதால் டெல்டா ப்ளஸ் கொரோனாவால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும், எனவே இனி வீடு வீடாக சென்று தடுப்பூசி போடும் பணிகள் குறித்து ஆராய்ந்து அதற்க்கான முயற்சிகளை மேற்கொள்ள விரைந்து நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.