திருமணத்தில் பங்கேற்ற 16 பேர் மீது மின்னல் தாக்கி பலி..!

வங்கதேசத்தில் திருமணம் ஒன்றி பங்கேற்ற 16 பேர் மீது மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
வங்கதேசத்தில் தற்போது பருவமழை பெய்து வருகிறது. அங்கு பெய்து வரும் கனமழையால் பல்வேறு சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. தென்கிழக்கு மாவட்டமான காக்ஸ் பஜாரில் கடந்த ஒரு வாரமாக பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
இந்த கனமழை காரணாமாக இதுவரை 20க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்த சமயத்தில் மேற்கு மாவட்டமான சாபானவாப்கஞ்சி என்ற பகுதியில் ஒரு திருமணம் நடைபெற்றது. இந்த திருமணம் அங்கிருந்த ஆற்றங்கரை ஓரத்தில் நடைபெற்றுள்ளது.
அப்போது பலத்த மழை காரணத்தால் அங்கு கூடியிருந்தவர்கள் ஒரு இடத்தில் ஒதுங்கி இருந்துள்ளனர். அங்கு மின்னல் திடீரென தாக்கியுள்ளது. இதில் அடுத்தடுத்த நொடிகளில் 16 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இந்த மின்னல் தாக்குதலில் மாப்பிள்ளைக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், மணப்பெண் இந்த இடத்தில் இல்லாத காரணத்தால் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025