மத்திய ரஷ்யாவில் பாராசூட் சாசக வீரர்களை ஏற்றிச் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில் 16 பேர் உயிரிழந்தனர்.
பாராசூட் சாசக வீரர்களை ஏற்றிச் சென்ற விமானம் மத்திய ரஷ்யாவில் இன்று விபத்துக்குள்ளானதில் 16 பேர் உயிரிழந்தனர். 23 பேருடன் சென்ற எல் -410 விமானம் டாடர்ஸ்தான் குடியரசின் மீது பறக்கும் போது உள்ளூர் நேரப்படி காலை 9:23 மணியளவில் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் ஆறு பேர் மீட்கப்பட்டனர். விபத்து சிக்கிய விமானத்தின் புகைப்படம் வெளியாகியுள்ளது. அதில், விமானம் இரண்டாக உடைந்திருப்பது போல தெரிகிறது. முன் பகுதி முழுமையாக நொறுங்கி உள்ளது. உயிர் பிழைத்த ஆறு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.
சமீப காலமாக ரஷ்ய விமான விபத்து அதிகரித்து வருகிறது. இந்த விபத்துகள் பழைய விமானங்களால் நடக்கின்றன. முன்னதாக, பழைய அன்டோனோவ் ஆன் -26 விமானம் கடந்த மாதம் ரஷ்யாவின் கிழக்கில் விபத்துக்குள்ளானது. இதில் ஆறு பேர் இறந்தனர். ஜூலை மாதம், கம்சட்காவில் நடந்த விமான விபத்தில் 28 பேரும் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…