நைஜீரியாவில் இரு சமூகத்தினருக்கு இடையே நடந்த மோதலில் 16 பேர் பலி, 300 பேர் காயம்..!

நைஜீரியாவில் பிளாட்டியூ மாநிலம் உள்ளது. அங்குள்ள கிராமம் ஒன்றில் இருவேறு கும்பல்களிடையே நடந்த மோதலில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் படுகாயம் அடைந்த 300-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த தாக்குதலுக்கான காரணம் என்னும் தெளிவாக தெரியவில்லை என ராணுவ கேப்டன் ஓயா ஜேம்ஸ் தெரிவித்தார்.
இப்பகுதியில் கால்நடை வளர்ப்பவர்களுக்கும் ,விவசாயிகளுக்கும் இடையே மோதல் ஏற்ப்பட்டு அடிக்கடி சண்டைகள் நடைபெறும். கடந்த மே மாதம் கால்நடை வளர்ப்பவர்களுக்கும், விவசாயிகளுக்கும் இடையே நடந்த மோதலில் 100 பேர் கொல்லப்பட்டனர். இப்பகுதியில், முஸ்லிம் கால்நடை வளர்ப்பவர்களுக்கும், கிறிஸ்தவ விவசாயிகளுக்கும் இடையே நீண்டகாலமாக மோதல்கள் இருந்து வருகின்றன. இப்படிப்பட்ட நிலையில் கிறிஸ்தவர்களின் மிகப்பெரிய பண்டிகையான கிறிஸ்மஸ் பண்டிகைக்கு ஒரு நாள் முன்னதாக நடந்த இந்த சம்பவம் தற்செயல் என்று கூறப்படாமல் நன்கு திட்டமிட்ட சதி என்று கூறப்படுகிறது.
இந்த வருடம் கால்நடை வளர்ப்பவர்களுக்கும், விவசாயிகளுக்கும் இடையே நடந்த மோதலில் இருவரை 116 பேர் உயிரிழந்துள்ளனர். சமீப வருடங்களில் இந்த இரு பிரிவினருக்கு இடையிலான மோதலால் நூற்றுக்கணக்கான உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025