155 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்றுடன் ‘யாஸ்’ புயல் கரையை கடக்க தொடங்கியுள்ளது.
மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் அதி தீவிரப் புயலாக வலுப்பெற்ற யாஸ் புயல்,தற்போது ஒடிசா-மேற்கு வங்கம் இடையே கரையைக் கடக்க தொடங்கியுள்ளது.
இருப்பினும்,புயல் கரையைக் கடப்பதால் ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடலோரப் பகுதிகளில் 155 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசுகிறது. இதனால்,வீடுகள் மற்றும் கட்டிடங்களின் கூரைகள் காற்றில் பறந்தன. மேலும்,பலத்த காற்று வீசுவதால் கடல் கொந்தளிப்பாக காணப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து,கடலோரப்பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும்,முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக ஒடிசா,மேற்கு வங்க மாநிலங்களின் தாழ்வான பகுதியில் உள்ள சுமார் 20 லட்சம் பேர் ஏற்கனவே வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும்,மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளுக்காக ராணுவம், விமானப்படை,கடற்படை மற்றும் பேரிடர் மீட்புப்படை வீரர்கள் தயார் நிலையில் இருந்து வருகின்றனர்.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடர் சமீபத்தில் நடந்து முடிந்து அடுத்ததாக இந்த மாதம் இறுதியில் அதாவது வரும் மார்ச் 22-ஆம்…
சென்னை : அதிமுக கட்சியில் கடந்த சில ஆண்டுகளாகவே குழப்பங்கள் நடந்து வருகிறது. முன்னாள் பொதுச் செயலாளர் வி.கே. சசிகலா, கட்சியின்…
சான் பிராசிஸ்கோ : உலகளவில் பெரிய சமூக வலைத்தளங்களில் ஒன்றாக வளர்ந்து நிற்கும் எக்ஸ் (டிவிட்டர்) நேற்று இரவு திடிரென முடங்கியது.…
சென்னை : பூமத்திய ரேகையை ஒட்டிய வடகிழக்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல்…
கீவ் : உக்ரைன் - ரஷ்யா போரானது நீண்ட மாதங்களாக நடைபெற்று வருகிறது. அமெரிக்க ராணுவ உதவியுடன் உக்ரைன், போரை…
சான் பிராசிஸ்கோ : உலகளாவிய பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) கடந்த சில மணிநேரங்களுக்கு முன்னர் தொழில்நுட்ப கோளாறு…