South Korea: சியோலில் ஹாலோவீன் திருவிழாவின் கூட்ட நெரிசலில் சிக்கி 151 பேர் பலி

Default Image

சனிக்கிழமை (அக்டோபர் 29) இரவு, தென் கொரியத் தலைநகர் சியோலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 151 பேர் உயிரிழந்தனர்.

அறிக்கைகளின்படி, இடாவோன் மாவட்டத்தின் குறுகிய தெருக்களில் ஹாலோவீன் பண்டிகையைக் கொண்டாட சுமார் 1,00,000 பேர் கூடியிருந்தனர்.கூட்டம் அலைமோதியதும், ஒருவரையொருவர் தள்ளிக்கொண்டு சிக்கிக் கொண்டவர்கள் சரிந்து விழத் தொடங்கினர்.

இந்த கூட்ட நெரிசலில் நிலைக்குலைந்து விழுந்த பலர் மூச்சுத்திணறியும் திடீர் மாரடைப்பால் மயங்கி விழுந்தனர்.பாதிக்கப்பட்டவர்களுக்கு கார்டியோபுல்மோனரி புத்துயிர் (CPR) வழங்குவதை காட்டும் பல வீடியோக்கள் இப்போது சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளன.

இதுவரை 151 பேர் பலியாகியுள்ளதாகவும் மேலும் 150 க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்