சீனாவில் யானைகள் புலம்பெயருவதற்கு ஏதுவாக 1,50,000 பேர் வெளியேற்றம்!
சீனாவில் யானைகள் புலம் பெயருவதற்கு எதுவாக 1,50,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
சீனாவிலுள்ள யுனான் மாகாணத்தில் சுற்றித் திரியக் கூடிய 14 ஆசிய காட்டு யானைகள், கடந்த இரு தினங்களுக்கு முன்பு யுவான்ஜியாங் ஆற்றங்கரையை கடந்து சென்றது. இந்த யானைகள் நகர்ந்து செல்வதற்கு ஏதுவாக 1,50,000 குடியிருப்பாளர்களை வெளியேற்றி உள்ளதாக உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த 14 காட்டு யானைகளையும் கண்காணிக்கும் வகையில் 25 ஆயிரத்துக்கு மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், ஏராளமான வாகனங்கள் மற்றும் ட்ரோன்களும் இதற்காக அனுப்பப்பட்டு உள்ளது எனவும் புலம்பெயர்ந்த யானைகளை கண்காணிக்கும் தலைமையகத்தின் தலைவர் வான் யோங் அவர்கள் தெரிவித்துள்ளார். இந்த யானைகள் இடம் பெயர்ந்த பொழுது இவைகளுக்கு சுமார் 180 டன் உணவு வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.