“டிஜிட்டல் இந்தியா… டிஜிட்டல் பரிவர்த்தனை… ரூ.1500 கோடிக்கு பரிவர்த்தனை”
புதுடில்லி : ரூ.1500 கோடிக்கு பரிவர்த்தனை நடந்துள்ளது.. நடந்துள்ளது என்று பெருமிதமாக தெரிவித்துள்ளார் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத். என்ன விஷயம் தெரியுங்களா?. இதுகுறித்து ராஜ்யசபாவில் சமாஜ்வாதி உறுப்பினர் ஜெயா பச்சன் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த “தகவல் தொழிற்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்ததாவது:மொபைல் போன் மூலம், பரிவர்த்தனைகள் மேற்கொள்ளும் வகையில் அறிமுகம் செய்யப்பட்ட, ‘பீம்’ ஆப் மூலம், 50 லட்சம் பரிவர்த்தனைகளில், 1,500 கோடி ரூபாய், ‘டிஜிட்டல்’ பரிவர்த்தனை நடந்துள்ளது. இதுவரை, இரண்டு கோடி பேர் இந்த, ‘ஆப்’பை பதிவிறக்கம் செய்துள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதையடுத்து ஜெயா பச்சன் தெரிவிக்கையில், ‛டிஜிட்டல்’ பரிவர்த்தனையை மேம்படுத்த அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்காக வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்றார்.
130 கோடி மக்கள் தொகையும் 65% படிப்பறிவு இல்லாத மக்களும் கொண்ட நாட்டில் இந்த டிஜிட்டல் பணபரிவர்த்தனை சாத்தியம் தானா..? என்ற கேள்வியும் இங்கு தோக்கி நிற்கிறது.