ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் 150 பள்ளி குழந்தைகள் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் அவ்வப்போது பள்ளி மாணவர்களை கடத்தி சென்று தற்கொலை படை பயங்கரவாதிகளாக மாற்றி வருகின்றனர். மேலும் சில பயங்கரவாத கூட்டமும் பள்ளி மாணவிகளை கடத்தி சென்று பிணை கைதிகளாக தங்கள் தேவைகளுக்காக வைத்துக் கொள்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட நைஜீரியாவில் உள்ள பள்ளிக்கூடங்களில் புகுந்த பயங்கரவாதிகள் மாணவர்களை கடத்தியதால் நைஜீரியாவில் உள்ள கெப்பி மாகாணத்தில் பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் இருக்கக்கூடிய பள்ளிக்கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது.
எனவே, கடந்த சில நாட்களாக இந்த பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் இல்லாமல் இருந்த நிலையில், மீண்டும் பயங்கரவாதிகளின் அட்டூழியம் நைஜீரியாவில் தொடங்கியுள்ளது. கடுனா எனும் பகுதியில் உள்ள பள்ளிக்குள் ஆயுதங்களுடன் புகுந்த மர்ம நபர்கள் 150 பள்ளிக் குழந்தைகளைக் கடத்திச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுவரை கடத்தப்பட்டவர்களில் ஒரு பெண் ஆசிரியர் உட்பட 26 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடர் சமீபத்தில் நடந்து முடிந்து அடுத்ததாக இந்த மாதம் இறுதியில் அதாவது வரும் மார்ச் 22-ஆம்…
சென்னை : அதிமுக கட்சியில் கடந்த சில ஆண்டுகளாகவே குழப்பங்கள் நடந்து வருகிறது. முன்னாள் பொதுச் செயலாளர் வி.கே. சசிகலா, கட்சியின்…
சான் பிராசிஸ்கோ : உலகளவில் பெரிய சமூக வலைத்தளங்களில் ஒன்றாக வளர்ந்து நிற்கும் எக்ஸ் (டிவிட்டர்) நேற்று இரவு திடிரென முடங்கியது.…
சென்னை : பூமத்திய ரேகையை ஒட்டிய வடகிழக்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல்…
கீவ் : உக்ரைன் - ரஷ்யா போரானது நீண்ட மாதங்களாக நடைபெற்று வருகிறது. அமெரிக்க ராணுவ உதவியுடன் உக்ரைன், போரை…
சான் பிராசிஸ்கோ : உலகளாவிய பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) கடந்த சில மணிநேரங்களுக்கு முன்னர் தொழில்நுட்ப கோளாறு…