மெக்ஸிகோ எல்லையில் துப்பாக்கி தாக்குதல் – 15 பேர் உயிரிழப்பு!
மெக்ஸிகோ எல்லையின் பல பகுதிகளில் நடத்தப்பட்ட துப்பாக்கி தாக்குதலில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மெக்சிகோவின் எல்லை நகரமாகிய ரெய்னோசாவில் பகுதியில் நேற்று பல வாகனங்களில் வந்த துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்கள் திடீரென தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளனர். இந்த தாக்குதலில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து பாதுகாப்பு படை குழு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், டெக்ஸாஸ் நகரின் கிழக்குப் பகுதியில் துப்பாக்கி ஏந்திய பலர் திடீரென தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. மேலும் காவலர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் பொழுது ஒருவர் உயிரிழந்ததாகவும், மற்ற 14 பேர் ஆங்காங்கே நடத்தப்பட்ட கண்மூடித்தனமான தாக்குதலில் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்த தாக்குதலுக்கு முன்பதாக தேசிய காவலர்கள் மற்றும் மாநில காவல்துறை ஒன்றாக திரண்டு துப்பாக்கிச்சடு நடத்தியவர்களிடம் தாக்குதலை நிறுத்துமாறு கேட்டுக் கொண்டதுடன் அவர்களின் மூன்று வாகனங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதியில் தொடர்ச்சியாக நீண்ட காலமாக சிலர் ஆதிக்கம் செலுத்தி வருவதாகவும், அடிக்கடி துப்பாக்கி ஏந்தியவர்கள் இதுபோன்று துப்பாக்கித் தாக்குதலில் ஈடுபடுவது வழக்கமாக நடைபெறுவதாகவும் கூறப்பட்டுள்ளது.