இரவில் சரியாக தூங்காததால் தொண்டையில் சிக்கிய 15 செ.மீ பிரஷ்..!
சீனாவில் இளைஞர் ஒருவரின் தொண்டைக்குள் 15 செ.மீ பிரஷ் சிக்கியது.
சிறு வயது குழந்தைகள் விளையாடும் போது சிறிய நாணயங்களை விழுங்குவார்கள், சிலர் பேனா முடிகளையும் தெரியாமல் விழுங்கி விடுவார்கள் இது நமக்கு தெரிந்த ஒன்றே .இந்நிலையில், கடந்த வாரம் சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள தைஜோவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் காலையில் அரை தூக்கத்தில் எழுந்துள்ளார். அந்த தூக்கத்திலேயே குளியல் அறைக்கு சென்று பல் துலக்க தொடங்கினார்.
அப்பொழுது தூக்கத்தில் 15 செ.மீ பிரஷ் அவரது தொண்டைக்குள் சென்றுவிட்டது. பிரஷின் பிடி வழுகி சென்று தொண்டைக்குள் சென்றது. அதை எடுக்க முயற்சித்தபோது மேலும் பிரஷ் தொண்டைக்குள் சென்றது. உடனே அந்த நபர் அதை எடுக்க வேறு எந்த முயற்சியும் செய்யாமல் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று உள்ளார்.
பின்னர், மருத்துவர்கள் பல மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து 15 செ.மீ பிரஷை வெளியே எடுத்தனர். இரவு போதுமான தூக்கம் இல்லாததால் ஏற்பட்ட விளைவாக இதை பார்க்கப்படுகிறது.