அக்டோபர் 15, உலக கை கழுவும் தினமாம்…..!
ஆண்டுதோறும் அக்டோபர் 15ந்தேதி, கை கழுவுவதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. குறிப்பாக குழந்தைகள் கைகழுவதலை ஊக்குவிக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்ட இந்த நாள், அனைவரும் ஒரு நாளில் பல முறை சோப்பு போட்டு கை கழுவ வேண்டும் என்பதை வலியுறுத்தும் வண்ணம் வலியுறுத்தப் படுகிறது. பலர் சாப்பிடு முன்னர் கை கழுவுவதே இல்லை. அல்லது கையை நினைத்துக் கொள்கிறார்கள். அது தவறு. சாப்பிடுமுன்னரும் சாப்பிட்ட பின்னரும் நன்கு கை கழுவ வேண்டும்.
வயிற்றுப்போக்கு, சுவாச தொற்று நோய்கள் உள்ளிட்டவைகளை தடுக்க எளிமையான வழியாக கை கழுவதலை ஊக்குவிக்கப்படுகிறது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான குழந்தைகள் நோயினால் இறக்கும் நிலை கட்டுப்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.