இலங்கையில் கடந்த சில வாரங்களாக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதன் காரணமாக இலங்கையில் உள்ள மக்கள் அகதிகளாக இந்தியாவிற்கு வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் இன்றும் படகு மூலமாக சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைய முயன்ற 14 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த 14 பேரில் 12 பேர் 3 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் எனவும், மற்ற இரண்டு பேர் படகோட்டிகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் 12 பேரும் இலங்கையிலுள்ள திருகோணமலையை சேர்ந்தவர்கள் எனவும், படகோட்டிகள் இருவரும் மன்னாரை சேர்ந்தவர்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.
இவர்கள் 14 பேரும் இன்று அதிகாலை மன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு வந்த பொழுது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும், இவர்கள் அனைவரும் மன்னார் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், இவர்கள் அனைவரும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக மன்னார் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லாகூர் : பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றைய நாள் ஆட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியும்,…
சென்னை : அஜித்குமார் நடிப்பில் இறுதியாக வெளியான விடாமுயற்சி திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனால் இப்படம் எதிர்பார்த்த வெற்றியை…
லாகூர் : பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றைய நாள் ஆட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியும்,…
லாகூர் : 2025 சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தி வருகிறது. பாகிஸ்தானுக்கு இந்திய கிரிக்கெட்…
வாஷிங்டன்: அமெரிக்கா ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிறகு டொனால்ட் டிரம்ப் செய்யும் அடுத்தடுத்த அதிரடி மாற்றங்கள் உலக அரசியலையே திரும்பி பார்க்க…
சென்னை : காங்கிரஸ் கட்சி என்றாலே அதில் உட்கட்சி பிரச்சனை அதிகம் இருக்கும் என்பது தொடர்கதையாகி வருகிறது. அதனை வெளிக்காட்டும்…