டெல்லி :இந்திய நாட்டின் 14-வது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் இன்று பதவியேற்கிறார். நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நண்பகல் 12.15 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் அனைத்து மாநில ஆளுநர்கள், முதலமைச்சர்கள் மற்றும் பல பிஜேபி தலைவர்களும் பங்கேற்கிறார்கள்.