#Breaking:ரஷ்யாவின் முதல் நாள் தாக்குதலில் 137 பேர் உயிரிழப்பு – உக்ரைன் அதிபர் அறிவிப்பு!
ரஷ்யாவின் முதல் நாள் தாக்குதலில் 137 பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அறிவிப்பு.
உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நேற்று உத்தரவிட்டு இருந்தார்.இதைத்தொடர்ந்து, உக்ரைன் மீது ரஷ்யப்படைகள் நேற்று காலை முதல் தாக்குதல் நடத்தி வருகிறது.அந்த வகையில், பெலாரஸில் முகாமிட்டிருந்த ரஷ்யப்படைகள் தரை மார்க்கமாக உக்ரைனுக்குள் நுழைந்து தலைநகர் கீவ் சென்றடைந்தனர்.
இந்நிலையில்,முதல் நாள் தாக்குதலில் 137 பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறியதாக AFP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், ரஷ்யாவின் தாக்குதலை உக்ரைன் தனி ஆளாக எதிர்த்து வருகிறது என்றும் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
137 dead after first day of fighting, reports AFP quoting Ukraine’s President Volodymyr Zelenskyy
— ANI (@ANI) February 25, 2022
இதற்கிடையில்,உக்ரைன் மீதான ரஷ்யா தாக்குதலை தடுத்து நிறுத்தவும், இந்தியா வலுவாக குரல் கொடுக்கவும், பிரதமர் மோடி உலகளவில் மதிப்புமிக்க தலைவர் என்பதால் அவரது பேச்சை புதின் கேட்பார் என தான் நம்புவதாக இந்தியாவிற்கு உக்ரைன் தூதர் இகோர் போலிக்கா கோரிக்கை விடுத்திருந்தார்.
இதனையடுத்து,உக்ரைன் – ரஷ்யா போர் தொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை தொலைபேசியில் தொடர்பு கொண்ட இந்திய பிரதமர் மோடி,உக்ரைனில் நடத்தி வரும் போரை ரஷ்யா உடனே நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது.