நைஜீரியாவில் கடத்தப்பட்ட 136 பள்ளி மாணவர்கள் விடுவிப்பு …!
நைஜீரியாவில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 136 மாணவர்கள் தற்பொழுது விடுவிக்கப்பட்டுள்ளனர்.
நைஜீரியா மாகாணத்தில் உள்ள பள்ளி ஒன்றில் கடந்த மே மாதம் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கடத்தப்பட்டுள்ளனர். இந்த மாணவர்களை பணம் கொடுத்து, மீட்டுக் கொள்ளும் படியாக பயங்கரவாதிகள் தெரிவித்திருந்த நிலையில், பெற்றோர்கள் மற்றும் பள்ளி நிர்வாகம் இணைந்து ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுக்க முன்வந்துள்ளனர். ஆனால் அந்ததொகை போதுமானதாக இல்லை என பயங்கரவாதிகள் வாங்க மறுத்துள்ளனர்.
இதனையடுத்து தற்போது கடத்தப்பட்ட 136 மாணவர்களையும் பயங்கரவாதிகள் விடுவித்து விட்டதாக பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் தெரிவித்துள்ளார். மேலும் இந்த மாணவர்கள் அனைவரும் மிக பலவீனமாக இருந்ததால் இவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.