கடும் பனிப்பொழிவு காரணமாக தொடர்ச்சியாக மோதிக்கொண்ட 130 வாகனங்கள் – 6 உயிரிழப்பு!

Default Image

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நிலவக் கூடிய கடுமையான பனிப்பொழிவு காரணமாக தொடர்ச்சியாக 130 வாகனங்கள் ஒரே நேரத்தில் மோதிக்கொண்டதில் 6 பேர் உயிரிழந்துள்ளது, 65 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

அமெரிக்காவின் ஆர்டிக் கடலில் வீசக்கூடிய கடும் காற்று காரணமாக பெரும்பாலான மாகாணங்களில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் சாலையில் செல்லக்கூடிய வாகன ஓட்டிகளுக்கு முன்னால் வரக்கூடிய வாகனங்கள் எது என்பது கூட சரியாக கண்டறிய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள இன்டெர் ஸ்டேட் 35 W சாலையில் இன்று பனிப்பொழிவு காரணமாக பெரும் விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.எனும்  இதில் அதிவேகமாக அடுத்தடுத்து வந்த வாகனங்கள் ஒன்றன் மீது ஒன்றாக மோதிக்கொண்டதில் 130க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒரே நேரத்தில் விபத்துக்குள்ளாகி உள்ளது.

இதில் 6 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 65 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள நிலையில், 30க்கும் மேற்பட்டோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களது நிலைமை மிக மோசமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. விபத்துக்கு முதல் காரணம் 18 சக்கர டிரைலர்கள், கார்கள் அனைத்தும் ஒன்றோடு ஒன்று மோதி சாலையில் உருண்டது தான் எனவும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் விபத்து நடந்த இடத்தில் தீயணைப்பு துறை மற்றும் போக்குவரத்து துறை இணைந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சாலையை மறைக்கும் அளவிற்கு அந்த இடத்தில் பனிமூட்டம் இருப்பதாகவும் இந்த இடங்களில் பணியின் காரணமாக அதிவேகமாக சென்ற வாகனங்கள் விபத்துக்கு உள்ளாகி உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்