லிபியாவில் 130 பேர் சென்ற படகு கடலில் கவிழ்ந்தது.
34 ஆண்டுகள் லிபிய அதிபராக இருந்த கடாபி கொல்லப்பட்டார். அதனை தொடர்ந்து, லிபியாவில் ஐ.நா. ஆதரவுடன் தேசிய இடைக்காலப் பேரவையின் கீழ் ஆட்சி அமைந்தது. இதனால் லிபியாவில் உள்ள வறுமை மற்றும் வேலையின்மை காரணமாக லிபியா மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர்.
இவர்கள் மத்திய தரைக்கடல் வழியாக சட்டவிரோதமாக படகு மூலம் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்கின்றனர். இப்படி மேற்கொள்ளும் பயணங்கள் பல விபத்தில் முடிக்கின்றன. இந்நிலையில் லிபியா தலைநகர் திரிபோலியில் இருந்து குழந்தைகள் உள்பட 130 பேர் ரப்பர் படகு ஐரோப்பிய நாடுகளுக்கு புறப்பட்டனர்.
அப்போது யாரும் எதிர்பாராத நிலையில், 130 பேர் சென்ற படகு கடலில் கவிழ்ந்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்து, தகவல் அறிந்து லிபியாவில் இயங்கி வரும் ஐரோப்பியாவின் கடல் மனிதாபிமான அமைப்பு விபத்துக்குள்ளான இடத்திற்கு சென்றபோது ஒருவரைக் கூட உயிருடன் பார்க்க முடியவில்லை என கூறினர். இதனால், பயணம் செய்த 130 பேரும் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்க கூடும் என அஞ்சப்படுகிறது.
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) காலமானார். உடல்நலக்குறைவால் நேற்று காலமான…
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…