துப்பாக்கியால் தனது சகோதரியை கொன்ற 13 வயது சிறுவன்..!
அமெரிக்காவில் 13 வயது சிறுவன் தனது 14 வயது சகோதரியை தவறுதலாக கொன்றான்.
அமெரிக்காவின் ஜார்ஜியாவில் 13 வயது சிறுவன், வீட்டில் துப்பாக்கிகளை தயாரித்து விற்பனை செய்து கொண்டிருந்த போது 14 வயது சகோதரியை தவறுதலாக கொன்றான். பணம் கொடுக்காமல் ஆயுதத்தை எடுத்துச் சென்றவர்களை நோக்கி அவர் துப்பாக்கியால் சுட்டதாகவும், ஆனால் அது அவரது சகோதரியைத் தாக்கியதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
சிறுவன் துப்பாக்கிகளை தயாரிப்பதற்கு தேவையான அனைத்து பாகங்களையும் ஆர்டர் செய்திருந்தான் என போலீசார் தெரிவித்தனர்.