ஜனாதிபதி தேர்தலலுக்கான வாக்குபதிவு 12 மணிக்கே நிறைவு!!
காலை 10 மணிக்கு துவங்கிய ஓட்டுப்பதிவு மாலை 5 மணி வரை நடக்கும் என கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் பகல் 12 மணிக்கே ஓட்டுப்பதிவு நிறைவடைந்துள்ளது. ஜனாதிபதி தேர்தலில் 232 தமிழக எம்.எல்.ஏ.,க்களும் தங்களின் ஓட்டுக்களை பதிவு செய்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுடன் சேர்த்து மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் கேரள எம்.எல்.ஏ., அப்துல்லா ஆகியோர் சிறப்பு அனுமதி பெற்று ஓட்டளித்துள்ளனர். இதனால் மொத்தம் 234 ஓட்டுக்கள் தமிழகத்தில் பதிவாகி உள்ளது. தமிழக எம்.எல்.ஏ.,க்களில் கருணாநிதி ஓட்டளிக்கவில்லை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவை அடுத்து, அவரது ஆர்.கே.நகர் தொகுதி காலியாக உள்ளது.ஜனாதிபதி தேர்தலில் பாதிவான ஓட்டுக்களின் எண்ணிக்கை சரிபார்க்கப்பட்டு, இன்று மாலை 5 மணிக்கு விமானம் மூலம் டில்லி கொண்ட செல்லப்பட உள்ளது. புதுச்சேரியில் ஓட்டுப்பதிவு நிறைவடைந்த உடன், இரண்டு ஓட்டுப்பெட்டிகளும் சேர்த்து ஒரே விமானத்தில் கொண்டு செல்லப்பட உள்ளது.