128 கோடி ரூபாய்க்கு ஏலம் போன 18-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த பொருள்..!
பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிசில் பிரபல சாத்பை நிறுவனத்தின் சார்பாக பாரம்பரிய பொருட்கள் ஏலம் விடப்பட்டன. அதில் 18-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சீன பீங்கான் ஜாடி ஒன்று ஏலம் விடப்பட்டது. மிகவும் பழமையான இந்த ஜாடி 4 கோடி ரூபாய்க்கு ஏலம் போகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஜாடியானது 128 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டது.
பாரம்பரிய முறையில் வடிவமைக்கப்பட்டிருந்த இந்த ஜாடி எதிர்பார்த்த விலையை விட 30 மடங்கு அதிக விலைக்கு போனது. பல ஆண்டுகளாக வீட்டில் குப்பை போல் வைக்கப்பட்டிருந்த ஜாடி பல கோடி ரூபாய்க்கு விலை போனது அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது