126 ஆண்டுகள் பழமையான சிவன் கோவில் திறப்பு – எங்கே தெரியுமா?

Default Image

பாகிஸ்தானில் 126 ஆண்டுகள் பழமையான சிவன் கோயில் மீண்டும் பக்தர்களுக்காக நேற்று திறக்கப்பட்டது.

பாகிஸ்தான் சிந்து மாகாணத்தின் ஹைதராபாத்தில் அமைந்துள்ள 126 ஆண்டுகள் பழமையான சிவன் கோயில் புதிப்பிக்கப்பட்ட பின்னர் மீண்டும் பக்தர்களுக்காக நேற்று திறக்கப்பட்டது. தற்போது திறக்கப்பட்டுள்ள கோஸ்வாமி புருஷோத்தம் கர் நிஹால் என்று அழைக்கப்படும் கோவிலுக்கு பக்தர்கள் வந்து செல்லவும், சடங்குகள் செய்யவும் வசதியாக அதைச் சுற்றிலும் உள்ள ஆக்கிரமிப்பு நிலங்களும் மீட்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்த கோவிலை ஒரு உள்ளூர் இந்து அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பாகிஸ்தானில் அரசு புள்ளிவிவரத்தின்படி அங்கு சுமார் 75 லட்சம் இந்துக்கள் வாழ்கின்றனர். அவர்களில் பெரும்பான்மையினர், சிந்து மாகாணத்தில் வசிக்கின்றனர். நாட்டின் மத தளங்களை மேற்பார்வையிடும் பாகிஸ்தானின் பினாமி சொத்து அறக்கட்டளை வாரியம், சமீபத்தில் பல பகுதியில்  கோயில்களை புதுப்பித்து உள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது, சிறுபான்மை இந்துக்களின் தங்களின் வழிபாட்டுத் தலங்கள் தங்களுக்கு மீட்கப்பட வேண்டும் என்ற நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றி, நாடு முழுவதும் உள்ள இந்து கோவில்களை மீண்டும் திறக்க பாகிஸ்தானின் அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, பாகிஸ்தானின் இந்து குடிமக்களுக்கு 400 கோயில்களை மீட்டெடுக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

சியால்கோட் மற்றும் பெஷாவரில் உள்ள 2 வரலாற்று ஆலயங்களுடன் இந்த செயல்முறை தொடங்கியது. சியால்கோட்டில் 1,000 ஆண்டுகள் பழமையான சிவாலய தேஜா சிங் (ஜகந்நாத் கோயில்) இதில் அடங்கும். பெஷாவரில், கோரக்நாத் கோயிலை மீண்டும் திறக்க பாகிஸ்தான் நீதிமன்றங்கள் உத்தரவிட்டன. அது ஒரு பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்