சிரியாவில் உள்நாட்டு போர் நடைபெற்று வருவதால், பலர் ஐரோப்பிய நாடுகளுக்கு கடல் வழியாக அகதிகளாக செல்ல முயற்சிக்கின்றனர். அதில் சிலர் ஆபத்தான கடல் பயணத்தை மேற்கொள்வதால், செல்லும் வழியிலேயே விபத்தில் சிக்கி உயிரிழக்கும் நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கடந்த 2015ம் ஆண்டு சிரியா அகதிகள் சென்ற படகு ஒன்று, துருக்கி கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழந்தனர். அதில் 3 வயது ஆண் குழந்தையான அய்லான் குர்தி உயிரிழந்து, கரை ஒதுங்கிய புகைப்படம் சமூக வலைதளத்தில் வரைலாகி உலகையே உலுக்கியது.
அந்த குழந்தையின் உடல் கடற்கரையில் முகம் புதைந்த நிலையில் கிடந்த காட்சி உலகையே உலுக்கியது மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் பல்வேறு விவாதங்களையும் ஏற்படுத்தியது. இதையடுத்து அகதிகளை சட்டவிரோதமாக படகில் அழைத்து சென்றதாக 3 பேரை துருக்கி போலீசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில் வழக்கு விசாரணையின் முடிவில் 3 பேர் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு அவர்கள் 3 பேருக்கும் தலா 125 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து துருக்கி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…