அடுத்த இரண்டு ஆண்டுகளில் 12,000 அமெரிக்க ஊழியர்களை வேலைக்கு அமர்த்தப்போவதாக இன்போசிஸ் அறிவித்தது.
கடந்த மூன்று ஆண்டுகளாக அமெரிக்காவில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் இன்போசிஸ் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறது. இதனால், அமெரிக்காவில் கடந்த 2017 ஆம் ஆண்டு இன்னும் இரண்டு ஆண்டுகளில் 10,000 அமெரிக்கர்களை வேலைக்கு அமர்த்துவதாக கூறியது.
ஆனால், இரண்டு ஆண்டுகளில் 13,000 பேரை வேலைக்கு அமர்த்தியது இன்போசிஸ். இந்நிலையில், அமெரிக்க ஊழியர்களை ஐந்து ஆண்டுகளில் 25,000 பேரை வேலைக்கு அமர்த்த முடிவு செய்துள்ளது. இதனால், அடுத்த இரண்டு ஆண்டுகளில் 12,000 அமெரிக்க ஊழியர்களை வேலைக்கு அமர்த்தப்போவதாக இன்போசிஸின் தலைமை நிர்வாக அதிகாரி சலீல் பரேக் கூறினார்.
அமெரிக்காவில் இன்போசிஸ் தனது பணிகளை மேம்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என கூறப்படுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில், இன்போசிஸ் அமெரிக்காவில் இந்தியானா, வட கரோலினா, கனெக்டிகட், ரோட் தீவு, டெக்சாஸ் மற்றும் அரிசோனா முழுவதும் ஆறு தொழில்நுட்ப மற்றும் கண்டுபிடிப்பு மையங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
இன்போசிஸ் அமெரிக்காவில் தனது தடத்தை விரிவுபடுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழகத்தில் திமுக அரசு மீது மக்களுக்கு அதிருப்தியே கிடையாது என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். சென்னையில்…
டெல்லி : நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று புதிய வருமான வரி மசோதாவை தாக்கல் செய்தார். நாட்டின் வரி…
கொழும்பு : இலங்கை vs ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலிய அணியை வெறும் 165 ரன்களுக்கு…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் விஜய் அரசியல் கட்சியை தொடங்கி வருகின்ற 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள…
தேனி : அதிமுகவில் மீண்டும் உட்கட்சி பூசல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. அதாவது, எடப்பாடி பழனிசாமிக்கு நடந்த பாராட்டு…
சென்னை : மக்களவைத் தேர்தலின் போது திமுக கூட்டணியில் இணைந்த மக்கள் நீதி மய்யத்திற்கு (மநீம), ஒரு மாநிலங்களவை உறுப்பினர்…