2018 ஆம் ஆண்டில் 12 மாதங்களில் நடைபெற்ற 12 சிறப்பு நிகழ்வுகள்…!ஒரு தொகுப்பு

Default Image

2018 ஆம் ஆண்டில் 12 மாதங்களில் நடைபெற்ற 12 சிறப்பு நிகழ்வுகளை நாம் இந்த தொகுப்பில் காண்போம்….
ஜனவரியில்  போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் :
Related image
ஜனவரி மாதத்தில் பெரிதும் மக்கள் பாதிக்கப்பட்டது போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் தான் .இதனால் அரசுப்பேருந்து பற்றாக்குறை ஏற்பட்டது.இதனால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். பின்  4ஆம் தேதி முதல் 11  ஆம் தேதி முதல்  8 நாட்களாக நடந்து வந்த போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் ஜனவரி 12 ஆம் தேதி  வாபஸ் பெறப்பட்டது.இதன் பின்னர் அரசு பேருந்துகள் முறையாக இயக்கப்பட்டது.
பிப்ரவரியில்  சட்டசபையில் ஜெயலலிதா படம்:
Image result for சட்டசபையில் ஜெயலலிதா படம்:
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் படத்தை தமிழக சட்டசபையில் வைக்க எதிர்க்கட்சிகள் மத்தியில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது.
பின்னர்  பிப்ரவரி 12 ஆம் தேதி பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே ஜெயலலிதா படம் தமிழ்நாடு சட்டமன்றத்தில் திறக்கப்பட்டது.
மார்ச்சில் பந்தை சேதப்படுத்திய விவகாரம்: 
Image result for பந்தை சேதப்படுத்திய விவகாரம்:
தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே  3-வது டெஸ்ட் போட்டி மார்ச் 24-ஆம்  தேதி நடைபெற்றது.இந்த போட்டியில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், பான்கிராப் ஆகியோர் சிக்கினார்கள்.இதனால்  டேவிட் வார்னர், ஸ்மித்துக்கு 12 மாதங்கள் தடை விதிக்கப்பட்டது.மேலும் ஸ்மித் கேப்டன் பதவியும் பறிக்கப்பட்டது.வார்னர் மற்றும் ஸ்மித்  ஐபிஎல் விளையாடவும் தடை விதிக்கப்பட்டது.
ஏப்ரலில் பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு:
Image result for GOBACKMODI
ராணுவ கண்காட்சியை துவக்கி வைக்க ஏப்ரல் 12 ஆம் தேதி  தமிழகம் வந்தார்.அப்போது  பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் #GOBACKMODI  என்ற ஹேஷ் டாக் உலக அளவில்   ட்ரெண்டாகியது.
மே மாதத்தில்  ஸ்டெர்லைட்க்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கி சூடு: 
Image result for ஸ்டெர்லைட்க்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கி சூடு
வேதாந்த நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடி மக்கள் 100 நாட்களுக்கு மேலாக  போராட்டம் நடத்தினர்.பின்னர்  மே 22ஆம் தேதிமாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை  நோக்கி நடந்த போராட்டத்தில் காவல்துறை நடத்திய தூப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.
ஜூன் மாதத்தில் வடகொரிய அதிபர்-அமெரிக்க அதிபர் சந்திப்பு:
Image result for வடகொரிய அதிபர்-அமெரிக்க அதிபர் சந்திப்பு
ஜூன் 12 -ஆம் தேதி பெரும் எதிபார்ப்புக்கு மத்தியில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் – அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இடையேயான சந்திப்பு  சிங்கப்பூரில் நடைபெற்றது.
ஜூலையில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா  வருகைக்கு எதிர்ப்பு: 
Image result for GoBackAmitShah
ஜூலை 9 ஆம் தேதி பாஜக தேசிய தலைவர் அமித் ஷா  தமிழகம் வருவதற்கு முன்னரே கோ பாக் அமித் ஷா ( ) என்ற ஹாஷ்  டாக்கை  ட்விட்டரில் ட்ரெண்டாக்கினர்.
ஆகஸ்ட்  கருணாநிதி மறைவு: 
Image result for கருணாநிதி மறைவு
வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவால் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த  முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி ஆகஸ்ட் 7-ஆம் தேதி  சிகிச்சை பலனின்றி அன்று  மாலை 6.10 மணிக்கு காலமானார்.
செப்டம்பர் மாதத்தில் ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து பெண்களும் சென்று வழிபட அனுமதி :
Image result for ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து பெண்களும் சென்று வழிபட அனுமதி
 
பல வருடங்களாக நடைபெற்ற வழக்கில் செப்டம்பர் 28 -ஆம் தேதி  கேரளா மாநில சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் சென்று வழிபடலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அக்டோபர் மாதத்தில்  உலகிலேயே மிக உயரமான சிலை திறப்பு: 
Related image
அக்டோபர் 31- ஆம் தேதி உலகிலேயே மிக உயரமான சிலையான, சர்தார் வல்லபாய் படேல் சிலையை பிரதமர் நரேந்திர  மோடி  திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.இதன் உயரம் 182 மீட்டர். உலகிலேயே மிக உயரமான சிலையாக கருதப்படுகிறது.
நவம்பர் மாதத்தில் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை சூறையாடியது கஜா புயல்: 
Related image
ஒருவாரமாக மக்களை மிரட்டிய கஜா புயல் நவம்பர் 16-ஆம் தேதி  நாகை-வேதாரண்யம் இடையே  முழுமையாக கரையை கடந்தது.இதன் பின்னர் நாகை,தஞ்சை,புதுக்கோட்டை ,திருவாருர் ஆகிய மாவட்டங்களில் பலத்த சேதங்கள் ஏற்பட்டது.
டிசம்பர் மாதத்தில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி: 
Image result for ஸ்டெர்லைட்
தமிழக அரசின் அரசாணையை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது.இதன் பின்னர் நடைபெற்ற வழக்கில் டிசம்பர் 15-ஆம் தேதி  தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்