ஒரே வீட்டில் 12 பேர்.! சிம்புவின் “வெந்து தணிந்தது காடு” படத்தின் இரண்டாம் பார்வை வெளியீடு.!

கவுதம் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கும் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் இரண்டாம் பார்வை வெளியீடு.
இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்து வரும் திரைப்படம் “வெந்து தணிந்தது காடு”. இந்த படத்தை வேல்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த 6- ஆம் தேதி வெளியானது.
இதனை தொடர்ந்து அடுத்த அப்டேட்டாக படத்தின் இரண்டாம் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. போஸ்டரில் ஒரு வீட்டிற்குள் சிம்புவுடன் 11 பேர் இருக்கின்றார்கள். அதில் சில தூங்கி கொண்டும், சிலர் மொபைல் பயன்படுத்துவது போல், சிம்பு எதோ சிந்தித்துக்கொண்டிருப்பது போல் இருக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது.
Here is the rustic 2nd Look of @VelsFilmIntl Productions @SilambarasanTR_‘s #VendhuThanindhathuKaadu #VTKSecondLook ????@menongautham @arrahman @IshariKGanesh @rajeevan69 @jeyamohanwriter @utharamenon5 @siddharthcinema @editoranthony @Kavithamarai @Ashkum19 @kabilanchelliah pic.twitter.com/vqQmyLN4nH
— Vels Film International (@VelsFilmIntl) August 27, 2021
படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு திருச்செந்தூரில் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், நேற்றுடன் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
ஜெயலலிதாவுடன் உரையாடும் வாய்ப்பை பெற்றிருந்தது என்னுடைய கௌரவம்! பிரதமர் மோடி பதிவு!
February 24, 2025
NZvBAN : தடுமாறிய பங்களாதேஷ்..தூக்கி நிறுத்திய ஜாகிர் அலி! நியூசிலாந்துக்கு வைத்த இலக்கு..
February 24, 2025
தோல்வியை சந்தித்த விடாமுயற்சி…சீக்கிரம் ஓடிடிக்கு வந்த முக்கிய காரணம்?
February 24, 2025
தவெக-வில் இணைகிறாரா காளியம்மாள்? அறிக்கையில் ‘இதை’ கவனித்தீர்களா?
February 24, 2025