12 லட்சம் குழந்தைகள் அடுத்த 6 மாதங்களில் உயிரிழக்கும் பேராபத்து.!
அடுத்த ஆறு மாதங்களில் 5 வயதிற்குட்பட்ட 12 லட்சம் குழந்தைகள் வழக்கத்தை விட கூடுதலாக உயிரிழக்க வாய்ப்பு என வெளியாகி உள்ளது.
அமெரிக்காவில் உள்ள ஒரு பொது சுகாதாரப்பள்ளி அமைப்பின் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வு ஒன்றில், தற்போது உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனா வைரசால் அதைகட்டுப்படுத்த பல நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தெற்காசியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் சுகாதார சேவைகள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
பல நாடுகளில் பள்ளிகள் மூலம் குழந்தைகளுக்கு உணவு கிடைப்பதாகவும், தற்போது ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் குழந்தைகளுக்கு முறையாக உணவு கிடைப்பதில்லை எனவும், ஊட்டச்சத்து கிடைக்காமல் குழந்தைகள் அபாயத்தை சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், அடுத்த ஆறு மாதங்களில் 5 வயதிற்குட்பட்ட 12 லட்சம் குழந்தைகள் வழக்கத்தை விட கூடுதலாக உயிரிழக்க வாய்ப்பு இருப்பதாகவும், இந்தியாவில் மட்டும் 3 லட்சம் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.