பங்களாதேஷில் உள்ள மசூதியில் எரிவாயு வெடித்து 12 பேர் உயிரிழப்பு.!
பங்களாதேஷில் உள்ள மசூதியில் எரிவாயு வெடித்து 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
பங்களாதேஷில் உள்ள மத்திய மாவட்டமான நாராயங்கஞ்சில் உள்ள மசூதியில் கடந்த வெள்ளிக்கிழமை மாலையில் பலர் தொழுகையில் இருந்துள்ளனர். அப்போது மசூதிக்குள் இருந்த ஏர் கண்டிஷனில் இருந்து தீப்பொறி ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் மசூதிக்குள் கேஸ் கசிந்து மசூதியில் நுழைந்ததால் கேஸ் வெடித்துள்ளது.
இதனால், 12 பேர் உயிரிழந்தனர். இறந்த 12 பேர் உட்பட 37 பேரை 70 முதல் 80 சதவீதம் தீக்காயங்களுடன் டாக்காவில் உள்ள சிறப்பு தீக்காய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மேலும் இந்த விபத்தில் குறைந்தது 45 பேர் காயமடைந்துள்ளதாகவும், அவர்கள் எரிவாயு கசிந்த வாசனை வந்ததாக கூறியதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
பங்களாதேஷில் கட்டுமான விதிமுறைகளில் பாதுகாப்பு விதிமுறைகளை பெரும்பாலும் மீறப்படுகின்றன. அதனாலேயே இதுபோன்ற விபத்துகள் நடப்பதாக கூறப்படுகிறது.