பங்களாதேஷ் மசூதியில் ஏசி வெடித்ததில் 12 பேர் பலி , 25 பேர் காயம்.!

பங்களாதேஷ் மசூதியில் ஏசி வெடித்ததில் 12 பேர் உயிரிழப்பு மற்றும் 25 பேர் காயமடைந்துள்ளனர்.
பங்களாதேஷின் தலைநகர் டாக்காவில் உள்ள ஒரு மசூதியில் ஆறு ஏர் கண்டிஷனர்கள் வெடித்து ஒரு குழந்தை உட்பட 12 பேர் உயிரிழந்தனர். தற்போது 25 பேர் மறுத்த்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆனால், சிகிச்சை பெற்று வருபவர்களின் உடலில் 90 சதவீதத்திற்கும் அதிகமான தீ காயம் ஏற்பட்டுள்ளதால் அவர்களின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.