ரஷ்யாவில் ஒரே நாளில் 11,231 பேருக்கு கொரோனா.! பாதிப்பு 1,77,160 ஆக உயர்வு.!

ரஷ்யாவில் நேற்று ஒரே நாளில் அதாவது கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 11,231 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
உலக முழுவதும் பரவி இருக்கும் கொரோனா வைரசால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பல்வேறு முன்னெச்சரிக்கை எடுக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் ரஷியாவில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அந்நாட்டு அதிபர் புதின் எடுத்து வருகிறார். கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக எண்ணெய் மதிப்பு சார்ந்துள்ள நிலையில், ரஷ்யா கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது.
இந்நிலையில், உலகளவில் கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் ரஷ்யா 5வது இடத்தை பிடித்துள்ளது. ரஷ்யாவில் நேற்று ஒரே நாளில் அதாவது கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 11,231 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்தம் பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,77,160 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நேற்று மட்டும் 88 பேர் உயிரிழந்த நிலையில், அங்கு பலியானோர் எண்ணிக்கை 1,625 ஆக அதிகரித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
டாஸ்மாக் முறைகேடு: “சிறுமீன்கள் முதல் திமிங்கலங்கள் வரை சிக்கும்”- தவெக தலைவர் விஜய் பரபரப்பு அறிக்கை!
March 16, 2025
சுனிதா – வில்மோரை மீட்கும் பணி வெற்றி.! பூமிக்கு திரும்பும்போது என்னென்ன பிரச்சனைகளை எதிர்கொள்வார்கள்?
March 16, 2025