தொழில் தொடங்க உகந்த நாடுகள் வரிசையில் இந்தியாவுக்கு 73_ஆவது இடம்…!!

Default Image
தொழில் தொடங்குவதற்கு உகந்த சூழல் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 73-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
நாடுகளில் உள்ள உள்கட்டமைப்பு வசதிகள், வரி விதிப்பு முறை, தொழில் தொடங்குவது, அந்நிய முதலீடுகள் தொடர்பான அரசின் முக்கிய கொள்கைகள், திவால் தொடர்பான சட்டங்கள், ஒப்பந்தங்களை அமல்படுத்துவது, கட்டுமான அனுமதி உள்ளிட்ட பல்வேறு விஷயங்களின் அடிப்படையில் ஆண்டு தோறும் தொழில் துவங்குவதற்கு உகந்த நாடுகள் பட்டியலை உலக வங்கி வெளியிட்டு வருகிறது.
புதிய பட்டியலை உலக வங்கி நேற்று வெளியிட்டது.  இதில், கடந்த ஆண்டு மேற்கூறிய பட்டியலில் 100-ஆவது இடத்தில் இருந்த இந்தியா, இந்த ஆண்டில் 23 இடங்கள் முன்னேறி, 73-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த 2014-ஆம் ஆண்டு பாஜக அரசு பதவியேற்கும்போது, இந்தப்பட்டியில் இந்தியா 142-ஆவது இடத்தில் இருந்தது. அதன் பிறகு 131-ஆவது இடம், 100-ஆவது இடம் என படிப்படியாக முன்னேறி, இப்போது 73 ஆவது இடத்துக்கு வந்துள்ளது.
மொத்தம் 190 நாடுகள் இடம் பெற்றுள்ள இந்தப் பட்டியலில் நியூசிலாந்து, சிங்கப்பூர், டென்மார்க், ஹாங்காங் ஆகிய நாடுகள் முறையே முதல் 4 இடங்களில் உள்ளன. அமெரிக்கா 8-ஆவது இடத்திலும், சீனா 46 ஆவது இடத்திலும் உள்ளது. பாகிஸ்தான் 136-ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.
dinasuvadu.com 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்