கிரீன்லாந்து: ஒரே நாளில்1100 கோடி டன் உருகிய பனிப்பாறை !
கிரீன்லாந்து நாட்டில் கோடைகாலத்தில் 50 சதவீத பனிக்கட்டிகள் உருகி விடுவது வழக்கம். இதை தொடந்து வரும் குளிர் காலங்களில் மீண்டும் பனிக்கட்டிகள் உறைந்து விடும். இந்நிலையில் கடந்த சில நாள்களாக ஐரோப்பா நாடுகளில் கடுமையான வெப்பம் தாக்கி வருகிறது.
இதனால் அங்குஉள்ள பனிக்கட்டிகள் அதிகமாக உருக தொடங்கி உள்ளது.இந்நிலையில் கிரீன்லாந்தில் ஒரே நாளில் மட்டும் 1100 கோடி டன் பனிப்பாறை உருகி கடல் நீர்மட்டத்தை அதிகரித்து உள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
பனிப்பாறைகள் உருகும் விடீயோவை ஆவணப்பட தயாரிப்பாளர் காஸ்பர் ஹார்லோவ் என்பவர் எடுத்து உள்ளார்.அந்த வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.இது குறித்து நாசா கூறுகையில் , கிரீன்லாந்தில் பனிப்பாறைகள் உருகும் நிகழ்வு நடந்து வருகிறது.உருகும் பனிப்பாறைகள் அட்லாண்டிக் பெருங்கடலில் கலந்து கடலின் நீர்மட்டத்தை அதிகரித்து உள்ளது.
This is a roaring glacial melt, under the bridge to Kangerlussiauq, Greenland where it’s 22C today and Danish officials say 12 billions tons of ice melted in 24 hours, yesterday. pic.twitter.com/Rl2odG4xWj
— Laurie Garrett (@Laurie_Garrett) August 1, 2019
புளோரிடா மாகாணத்தை முழுவதையும் ஐந்து அங்குலம் நீரால் மூடும் அளவிற்கு ஒரே நாளில் பனிப்பாறைகள் உருகி உள்ளதாக நாசா தெரிவிக்கின்றனர்.