பெரு நாட்டில் படகு விபத்து: 11 பேர் பலி..!
பெரு நாட்டில் இரண்டு படகுகள் மோதி 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
பெரு நாட்டில் உள்ள ஹல்லகா ஆற்றில் படகு விபத்து ஏற்பட்டுள்ளது. நேற்று சாண்டா மரியாவிலிருந்து யுரிமைகஸ் என்ற பகுதிக்கு படகு மூலம் ஹல்லகா ஆற்றில் 80 பேர் பயணித்துள்ளனர். அந்த சமயத்தில் ஆற்றில் மோட்டார் படகு ஒன்று சென்றுள்ளது. அப்போது மோட்டார் படகு இந்த படகின் மேல் மோதியதில் 11 பேர் பலியாகியுள்ளனர்.
இந்த விபத்து குறித்து தெரிவிக்கப்பட்டதுடன் அந்நாட்டின் மீட்பு படை மற்றும் பாதுகாப்பு படை இரண்டும் மாயமானவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளது. மேலும், படகில் 20 குழந்தைகள் இருந்ததால் அங்கு பதற்ற நிலை உருவாகியுள்ளது. இந்த விபத்து குறித்த விசாரணையும் நடைபெற்று வருகிறது.