செப். 11 வரை கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல முடியாது!
புதுதில்லி, –
மும்பையைச் சேர்ந்தஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம், வெளிநாட்டி லிருந்து பெற்ற ரூ. 305 கோடிமதிப்பிலான முதலீடுகளை, வெறும் 4 கோடி ரூபாயாக குறைத்துக் காட்டி, அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரி யத்தின் அனுமதியைப் பெற்றது. இவ்விவகாரத்தில் மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்திற்குரூ. 90 லட்சம் கைமாறிய தாகவும் புகார் எழுந்தது. அதனடிப்படையில் வழக்கு பதிவு செய்த சிபிஐ,கார்த்தி சிதம்பரத்தை குற்ற வாளியாக அறிவித்தது. விமான நிலையங்களுக்கு லுக்-அவுட் நோட்டீஸையும் அனுப்பி வைத்தது.சிபிஐ-யின் இந்த நடவடிக்கைகளை எதிர்த்து, கார்த்தி சிதம்பரம் சென்னை உயர் நீதிமன்றம் சென்றார். மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் லுக்-அவுட்நோட்டீஸை ரத்து செய்தது.ஆனால் சிபிஐ உச்சநீதிமன்றத்தில் மேல்முறை யீடு செய்தது.
உச்ச நீதி மன்றமோ, சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்காலத் தடைவிதித்தது. இந்நிலையில், வெள்ளி யன்று இந்த வழக்கு மீண்டும்விசாரணைக்கு வந்தது. அப்போது, கார்த்தி சிதம்பரத்தை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்ததற்கு தகுந்த காரணங்கள் உள்ள தாக மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர்ஜெனரல் துஷார் மேத்தா வாதிட்டார். லுக்-அவுட் நோட்டீஸ் அனுப்பியது சரிதான் என்றும் கூறினார்.இதையடுத்து, இவ்வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றம் செப்டம்பர் 11-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது. இதனால் கார்த்தி சிதம்பரம் வெளி நாடு செல்வதற்கான தடைதொடரும் நிலை ஏற்பட்டுள் ளது.